தமிழ் நாடு
புதுச்சேரியில் புதிய அமைச்சராக திருமுருகனை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த சந்திர பிரியங்கா முன்னதாக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். அவர் பதவிவிலகியதை அடுத்து காரைக்கால் வட்டாரத்துக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என அதிருப்தி எழுந்தது.
என்.ஆர். காங்கிரசைச் சேர்ந்து திருமுருகனுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு வாய்ப்பு வந்துள்ளது.
புதுச்சேரி அமைச்சரவையில் அவர் பதவியேற்கும் நாளிலிருந்து இது நடைமுறைக்கு வரும் என்று உள்துறை இணைச்செயளாளர் அசுத்தோஷ் அக்னிகோத்ரி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் 7ஆம் தேதி பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.