ஆம்பூர் அருகே டூ வீலரில் 5 பேராகச் சென்றபோது விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே டூ வீலரில் 5 பேராகச் சென்றபோது விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

புத்தாண்டுத் துயரம்- டூவீலரில் 5 பேராகச் சென்றபோது விபத்தில் 2 குழந்தைகள் பலி!

ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரியன் ஆண்டுப் பிறப்பை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன், இன்று காலையில் தன் மனைவி, மூன்று குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றார்.

ஐந்து பேரும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மாராப்பூர் அருகில் லாரி ஒன்று திடீரென இடப்பக்கம் திரும்பியது. பரந்தாமன் குடும்பம் பயணித்த இருசக்கர வாகனம் தடுமாறி, அனைவரும் கீழே விழுந்தனர்.

அதில் தம்பதியரின் 9 வயது குழந்தை கார்திகாஸ்ரீ, 6 வயது குழந்தை பேரரசி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பரந்தாமன், அவரின் மனைவி காவேரி, இன்னொரு மகள் இளவரசி ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.     

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com