மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். 
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.  படம்: நன்றி- கவாஸ்கர்

பெரியாரின் 50-ம் நினைவு நாள்- தலைவர்கள் மலர் மரியாதை!

பெரியாரின் 50ஆவது நாளான இன்று தமிழகம் முழுவதும் அதிகமான அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள், சமூக நீதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் மரியாதை செலுத்திவருகின்றனர். 

தமிழ்நாட்டு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைப் பீடத்தில் மலர் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, உதயநிதி, அன்பில் மகேஸ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். 

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்க்கட்சியின் மாணவரணிச் செயலாளர் விஜயகுமார், தென்சென்னை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜெயவர்த்தன் உட்பட்டோர் மலர் மரியாதை செலுத்தினர்.

அண்ணா சாலை பெரியார் சிலைப் பீடம் முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் மரியாதை
அண்ணா சாலை பெரியார் சிலைப் பீடம் முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் மரியாதை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மைய சென்னை மாவட்டச்செயலாளர் செல்வா உட்பட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com