வேலூரில் பெரியார் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
வேலூரில் பெரியார் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

பெரியார் பிறந்த நாள்: வேலூரில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இன்று மரியாதை செலுத்தினார். 

தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்காக வேலூருக்குச் சென்றுள்ள ஸ்டாலின், காலையில் அண்ணா சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் தி.மு.க. வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோரும் பெரியாருக்கு மலர் மரியாதை செலுத்தினர்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com