தமிழ் நாடு
வேலைநிறுத்தம் செய்யப்பட்டாலும்தொ.மு.ச. உட்பட்ட சங்கத்தினரை வைத்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதையடுத்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தி.மு.க.வின் சார்பு அமைப்பான தொ.மு.ச. போக்குவரத்து ஊழியர் சங்கம் அரசின் முடிவுக்கு ஏற்ப வேலைநிறுத்தம் செய்யாமல் பேருந்துகளை இயக்க முடிவுசெய்துள்ளது. தொமுச பேரவையின் பொதுச்செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் சதியை முறியடிக்க பேருந்துகளை இயக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.