முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

பொங்கல் பரிசாக ரூ.1000; வருமான வரி செலுத்துவோருக்கு கிடையாது!

பொங்கல் பரிசுத்தொகுப்புடன்ஆயிரம் ரூபாய் ரொக்கமும் சேர்த்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சில நாள்களுக்கு முன்னரே பொங்கல் பரிசுப் பொருள்கள்தொகுப்புடன் ரொக்கத்தொகையும் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் ரொக்கமும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடிபழனிசாமி, பா.ம.க. நிறுவனர் இராமதாசு உட்பட பல கட்சிகளின்தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 

மைய, மாநில அரசுகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்ற அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் பொங்கல் பரிசாக பொங்கல் விழாவுக்கு முன்னர் வழங்கப்படும் என்று முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com