பொங்கல் ரயில் முன்பதிவு தொடக்கம் : எந்தெந்த நாளில் பதியவேண்டும்?

பொங்கல் ரயில் முன்பதிவு தொடக்கம் : எந்தெந்த நாளில் பதியவேண்டும்?

வரும் பொங்கல் விழாவுக்கான தொடர்வண்டி முன்பதிவு இன்று தொடங்குகிறது. போகி நாளுக்கு முன்னர் தொடங்கி, காணும் பொங்கலுக்கு மறுநாள்வரை எந்தெந்த நாளுக்கு என்றைக்கு முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்வண்டியில் 120 நாள்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யமுடியும் எனும் நிலையில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவுக்கும் மக்கள் நேரிலும் இணையத்திலும் முந்திக்கொண்டு பதிவு செய்வார்கள்.

வரும் ஜனவரி 15ஆம் தேதி திங்களன்று பொங்கல் விழா வருகிறது. அதற்கு முன்னர் 14ஆம் தேதி (ஞாயிறு) போகி, 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் என திருவிழாக்கள் இடம்பெறுகின்றன.

பொங்கல் திருவிழா தொடருக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ஜனவரி 12ஆம் தேதி சனிக்கிழமை பயணம் செய்வோர் இன்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்வோர், நாளை- 15ஆம் தேதி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஜனவரி 14ஆம் தேதி பயணம் செய்வோர், வரும்16ஆம் தேதி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்வோர் வரும்17ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்வோர் இம்மாதம்18ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

காணும் பொங்கலான 17ஆம் தேதி பயணம் செய்வோர்,19ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com