ம.தி.மு.க.வுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - உடன்பாடு கையெழுத்து!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Published on

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

அக்கட்சியின் சார்பில் ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவைத் தொகுதி கேட்கப்பட்டு வந்த நிலையில், இன்று உடன்பாடு முடிவாகியுள்ளது. 

அண்ணா அறிவாலயத்தில் சற்று முன்னர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இருவரும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.   

மாநிலங்களவை இடம் பற்றி எதுவும் பேசப்படவில்லை; உரிய நேரத்தில் அதைப் பற்றிப் பேசுவோம் என்று வைகோ தெரிவித்தார்.  

எந்தத் தொகுதியில் போட்டி என்பது உறுதி செய்யவில்லை என்றும் அவர் கூறினார். 

தி.மு.க. கூட்டணியில் முன்னதாக இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com