மதுரை துணைமேயர் மீது கொலைவெறித் தாக்குதல்!

மதுரை துணைமேயர் மீது கொலைவெறித் தாக்குதல்!

மதுரை மாநகராட்சியின் துணைமேயரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகியுமான நாகராஜன் மீது நேற்று இரவு ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. நல்வாய்ப்பாக நாகராஜன் உஷாராகச் செயல்பட்டதால் உயிர்தப்பினார்.

மதுரை ஜெய்கிந்துபுரம் பகுதியில் உள்ள அவரின் வீட்டில் வைத்து நேற்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பின்னர், அரிவாள் ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் முதன்மைச் சாலையில் உள்ள அவரின் அலுவலகத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தியது.

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிந்து, தாக்குதலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யக்கோரி, ஜெய்கிந்துபுரம் முதன்மைச் சாலையில் இன்று மாலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உடபட பலரும் இதில் பங்கேற்கின்றனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com