என்.சங்கரய்யா
தமிழ் நாடு
மருத்துவமனையில் சங்கரய்யாவிடம் வைகோ நலம் விசாரித்தார்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மூத்த தலைவர் சங்கரய்யாவை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலையில் நேரில் நலம் விசாரித்தார்.
“விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவரும், பொதுவுடமைக் கட்சி இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 36 பேரில் ஒருவரும், 102 வயதில் எண்பதாண்டு பொதுவாழ்க்கைக்கு உரியவர்” என்று குறிப்பிட்டுள்ள வைகோ,
மருத்துவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் பிற நிர்வாகிகளிடமும், சங்கரய்யா குடும்பத்தினரிடமும் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார் என்று ம.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.