மார்ச் 1இல் +2, மார்ச் 26இல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்- அட்டவணை வெளியீடு!

மார்ச் 1இல் +2, மார்ச் 26இல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்- அட்டவணை வெளியீடு!

நடப்பு கல்வியாண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதிவரை நடைபெறும் என்றும், பதினொன்றாம் வகுப்புத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மே 6ஆம் தேதியன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவும், 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு முடிவும், 14ஆம் தேதி பதினொன்றாம் வகுப்புத் தேர்வு முடிவும் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் இன்று தெரிவித்தார்.

பன்னிரண்டாம் வகுப்புக்கு,

மார்ச் 1 வெள்ளியன்று தமிழ் உட்பட்ட முதல் மொழித் தாள்,

5ஆம் தேதி செவ்வாய் அன்று ஆங்கிலம்,

8ஆம் தேதி வெள்ளியன்று கணினி அறிவியல், கணினிப் பயன்பாடுகள், உயிர்வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் தொழிற்கல்விப் பாடம், அடிப்படை மின்னியல், தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடும் நெறிமுறையும், சிறப்புத் தமிழ்,

11ஆம் தேதி திங்களன்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்,

15ஆம் தேதி வெள்ளியன்று இயற்பியல், பொருளியல், கணினித் தொழில்நுட்பம், வேலைத்திறன்கள்,

19ஆம் தேதி செவ்வாயன்று கணிதம், உயிரியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு- ஊட்டச்சத்தியல், ஜவுளி- ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், செவிலியர்-பொது,

22ஆம் தேதி வெள்ளியன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணக்கியல்- புள்ளியியல், அடிப்படை மின்னணுப் பொறியியல், அடிப்படை கட்டுமானப் பொறியியல், அடிப்படை வாகனப் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பவியல், அலுவலக மேலாண்மை- செயலரியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.

பத்தாம் வகுப்புக்கு,

மார்ச் 26 செவ்வாய் அன்று தமிழ் உட்பட மொழிப் பாடங்கள், 28ஆம் தேதி வியாழன் அன்று ஆங்கிலம், ஏப்ரல் முதல் தேதி திங்களன்று கணிதம், 4ஆம் தேதி வியாழனன்று அறிவியல், 6ஆம் தேதி விருப்பமொழிப் பாடம், 8ஆம் தேதி திங்களன்று சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.

பதினொன்றாம் வகுப்புக்கு

மார்ச் 4 திங்களன்று தமிழ் உட்பட்ட முதல் மொழித் தாள்,

7ஆம் தேதி வியாழன் அன்று ஆங்கிலம்,

12ஆம் தேதி செய்வ்வாய் அன்று இயற்பியல், பொருளியல், கணினித் தொழில்நுட்பம், வேலைத்திறன்கள்,

14ஆம் தேதி வியாழன் அன்று, தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடும் நெறிமுறையும், கணினி அறிவியல், கணினிப் பயன்பாடுகள், உயிர்வேதியியல், சிறப்புத் தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், செவிலியர் (தொழிற்கல்வி), அடிப்படை மின்னியல் பொறியியல்,

18ஆம் தேதி திங்களன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணக்கியல்- புள்ளியியல், அடிப்படை மின்னணுப் பொறியியல், அடிப்படை கட்டுமானப் பொறியியல், அடிப்படை வாகனப் பொறியியல், அடிப்படை இயந்திரவியல் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பவியல், அலுவலக மேலாண்மை- செயலரியல்,

21ஆம் தேதி வியாழன் அன்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்,

25ஆம் தேதி திங்கள் அன்று கணிதம், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு- ஊட்டச்சத்தியல், ஜவுளி- ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், செவிலியர்(பொது) ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com