சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்

மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட சி.பி.எம். கட்சியினரும் தயார்!

புயல், பெருமழை மீட்பு, நிவாரணப் பணிகளில், தி.மு.க.வைத் தொடர்ந்து சி.பி.ஐ(எம்) கட்சியின் மாநிலத் தலைமையும் கட்சி அணிகள் முழுமையாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: 

” வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னை அருகில் கரையை கடக்கவுள்ளது. 2015-16 ஆண்டுகளுக்கு பின்னர் மிக அதிகமான மழைப் பொழிவு இருக்கும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  புயல் முழுமையாக அடங்கும் வரை, அனைவரும்  பாதுகாப்புடன் இருந்து, புயலை கடக்க வேண்டும்.

கட்சியின் மாவட்டக் குழுக்களும், அனைத்து கிளைகளும், நிவாரணம் - மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும், உதவி தேவைப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை உறுதி செய்தும், அரசு நிர்வாகத்தோடு இணைந்தும்  மக்களுக்கு கரம் கொடுக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு  கேட்டுக்கொள்கிறது.” என்று கே.பாலகிருஷ்ணன் தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com