மு.க.ஸ்டாலின் போட்ட 2017 ட்வீட்- சீமான் மறுபகிர்வு!

மு.க.ஸ்டாலின் போட்ட 2017 ட்வீட்- சீமான் மறுபகிர்வு!

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் வெளியிட்ட ட்விட்டை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் எடுத்துப்போட்டு மறுபதிவு செய்துள்ளார். 

கடந்த 2017ஆம் ஆண்டு மே 15ஆம் தேதியன்று ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டில், “மக்கள் படும் அவதிகளை நீக்க முதல்வர் இனியும் கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

அதை இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறுபகிர்வு செய்துள்ள சீமான், ”கடந்த 2017ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையொட்டி, நீங்கள் எந்தக் கருத்தை வலியுறுத்தி அப்போதைய முதல்வருக்குக் கோரிக்கை வைத்தீர்களோ, அதே போன்றதொரு சூழலில், அதே கருத்தை, தற்போதைய முதல்வராக உள்ள தங்களுக்கு நினைவுப் படுத்த வழிமொழிகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இத்துடன், இன்று நா.த.கட்சியின் தலைமையகத்தில் ஊடகத்தினரிடம் பேசிய சீமான், போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பிடித்துவைக்கப்பட்ட 7,500 கோடி ரூபாய் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினர்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com