முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on

தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிப்பது குறித்து, மைய, மாநில அரசுகளும் சிபிஐயும் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த கருப்பையா காந்தி சார்பில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

அவர் தன் மனுவில்,

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, மஸ்தான், தா.மோ.அன்பரசன். சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலூர் கதிர்ஆனந்த், மைய சென்னை தயாநிதி மாறன் ஆகியோர் மீது பல நீதிமன்றங்களில் நடத்தப்படும் வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு வழக்குகளை மாற்ற வேண்டும் என்றும்

நிலுவையிலுளை புலன் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்றும்

அமைச்சர்கள் மீது உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவுசெய்த வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும்

அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு, மஸ்தான் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும்

இந்த வழக்குகளை விசாரிக்க குற்றவியல் சட்ட அனுபவம் மிக்க தமிழ்நாட்டைச் சாராத நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும்

கருப்பையா கோரியிருந்தார்.

வழக்கை வரும் டிசம்பர் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் பதில் மனுவைத் தாக்கல்செய்யுமாறு உத்தரவிட்டடது.

logo
Andhimazhai
www.andhimazhai.com