மேகாலயா தலைமை நீதிபதியாக தமிழக நீதிபதி வைத்தியநாதன்!

நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
Published on

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதுநிலை நீதிபதி எஸ். வைத்தியநாதன், மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேகாலயா தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்கி கடந்த ஒன்றாம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், உடனடியாக அந்த இடத்துக்கு வைத்தியநாதனின் பெயரை நீதிபதிகள் தேர்வுக்குழு- கொலிஜியம் அறிவித்தது. 

உயர்நீதிமன்ற நீதிபதியாக 2013ஆம்ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இவர் 1,219 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com