இன்று தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையும் அதிக கனமழையும் செய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 15ஆம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
நாளை 16ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் விருதுநகர் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 17ஆம் தேதி அன்று மாநிலத்தின் பரவலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டாம் தேதி அன்று தென்கோடி மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு.
வரும் 19ஆம் தேதி ஞாயிறு அன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்திருக்கிறது.