ரயில் விபத்து- முதல்வர் உத்தரவு, அமைச்சர் விரைவு!

train accident near thiruvallur kavarappettai
சென்னை அருகே ரயில் விபத்து
Published on

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார். 

 " தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அமைச்சர் ஆவடி நாசரையும்  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன்.

மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது.

விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்." என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com