எடப்பாடி பழனிசாமிக்கு இராமர் கோயில் திறப்பு விழா குழுவினர் அழைப்பிதழ் அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு இராமர் கோயில் திறப்பு விழா குழுவினர் அழைப்பிதழ் அளித்தனர்.

ராமர் கோயில் திறப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராமர் கோயில் வரும் 22ஆம்தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார். அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பிதழ் அளிக்கப்பட்டுவருகிறது. 

நீண்ட காலமாக இந்துத்துவ அரசியலைப் பரப்பிவந்த சிவசேனை உத்தவ் தாக்கரே கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பகிரங்கமாக ஆதங்கம் தெரிவித்தார். அதற்குப் பதிலடியாக இராமர் கோயிலின் புதிய பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள உண்மையான இராமர் பக்தர்களுக்குதான் அழைப்பு விடுக்கப்படுகிறது எனக்கூறியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோயில் விழாக்குழுவினர் அழைப்பிதழ் அளித்துள்ளனர்.

சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று விழாக் குழுவின் சார்பில் நிர்வாகிகளான பா. பிரகாஷ், ராமராஜசேகர், ராம்குமார் ஆகியோர் அவரைச் சந்தித்து அயோத்தி இராமர் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழை வழங்கினர்

logo
Andhimazhai
www.andhimazhai.com