தமிழ் நாடு
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் இராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவருமான இலாலு பிரசாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்தன் சமூகஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவு:
” இராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் திரு. லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள், உறுதிகுலையாமல் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தது ஆகியவை ஒரு நியாயமான, சமநிலைச் சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன.
உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக அமைந்து வருகின்றது.” என்று மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.