வந்தே பாரத் ரயில்வண்டி மீது கல்வீச்சு- 7 பெட்டிகளில் சேதம்!

வந்தே பாரத் ரயில்வண்டி மீது கல்வீச்சு- 7 பெட்டிகளில் சேதம்!

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற வந்தே பாரத் தொடர்வண்டி மீது விசமிகள் கல்வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையிலிருந்து ஞாயிறு பிற்பகல் 2.50 மணிக்கு நெல்லையை நோக்கி வந்தே பாரத் தொடர்வண்டி வழக்கம்போல புறப்பட்டது. இரவில் மணியாச்சி - நாரைக்கிணறு நிலையங்களுக்கு இடையில் அந்த வண்டி சென்றுகொண்டிருந்தபோது அதன்மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.  

இதில் ஏழு பெட்டிகளில் சன்னல் கண்ணாடி உடைந்து சேதமாகின. திடீர்த் தாக்குதலால் பயணிகள் பயந்து அலறினார்கள். 

தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் சேதமடைந்த தொடர்வண்டிப் பெட்டிகளை ஆய்வுசெய்தனர். வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com