வாச்சாத்தி கிராமம்
வாச்சாத்தி கிராமம்நன்றி: பாரதி கிருஷ்ணகுமார்

வாச்சாத்தி குற்றவாளிகளின் மேல்முறையீடு கோரிக்கை - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

வாச்சாத்தி மலைக் கிராமத்தில் பழங்குடியினர் மக்களுக்கு வன்கொடுமைகளைச் செய்த குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் அண்மையில் தண்டனையை உறுதிப்படுத்தியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து முதன்மைக் குற்றவாளியான வனத்துறை உயர் அதிகாரி நாதன், பாலாஜி ஆகியோர் உட்பட 30 பேர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி விசுவநாதன், தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய குற்றவாளிகளின் கோரிக்கையை மறுத்துவிட்டார். ஆனால், எண்பத்தாறு வயதாகும் ஹரிகிருஷ்ணன் மட்டும் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் யாருக்கும் பிணை வழங்கப்பட்டிருந்தால், அதை உடனடியாக ரத்துசெய்யவும் நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com