விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்

விக்கிரவாண்டியில் ஜூலை 10-ல் இடைத்தேர்தல்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் வரும் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் இம்மாதம் 21ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 

விக்கிரவாண்டி உட்பட மற்ற மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 

இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.  

முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விழுப்புரத்துக்குச் சென்றபோது, சிகிச்சை பெற்றுவந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தியும் கலந்துகொண்டார். மேடையில் இருந்தபோதே அவருக்கு உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com