மருத்துவர் அபிநயா
மருத்துவர் அபிநயா

விக்கிரவாண்டி: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு!

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 8-ஆம் தேதி அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அடுத்த மாதம் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, தற்போது நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. களம் காண்கிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 21ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com