சி.அன்புமணி
சி.அன்புமணி

விக்கிரவாண்டி- பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் பா.ஜ.க. அணியின் சார்பாக சி. அன்புமணி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பா.ம.க. நிறுவனர் இராமதாசு இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.   

முன்னதாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.அன்புமணி, இராமதாசின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com