விடாது லியோ... கோட்டைக்குள் கார் மோதி இருவர் உயிர்தப்பினர்!

விடாது லியோ... கோட்டைக்குள் கார் மோதி இருவர் உயிர்தப்பினர்!

விடாது கருப்பு என்பதைப் போல, விஜயின் லியோ திரைப்பட விவகாரத்தில் சென்னை தலைமைச்செயலகத்தில் கார் மோதி உடற்பயிற்சியாளர்கள் இருவர் உயிர்தப்பினர்.  

லியோ திரைப்படம் விவகாரம் தொடர்பாக உள்துறைச் செயலாளர் அமுதாவிடம் நேரில் மனு அளிக்க, லியோ படத்தின் வழக்குரைஞர் வேலு கார்த்திகேயனும் அவருடன் குழுவினரும் சென்றனர். மனு தந்தபிறகு ஊடகங்களிடம் பேச அவர்களில் சிலர் சென்றனர். அப்போது, வழக்குரைஞரின் காரை அங்கு அதிவேகமாக ஓட்டியதில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தலைமைச்செயலக உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்கள் சரவணன், நிலா ஆகியோர் காயமடைந்தனர். பயங்கர வேகத்தில் மோதியபோதும் இருவரும் சிறுகாயங்களுடன் தப்பினர்.

தலைமைச்செயலகத்துக்கு உள்ளேயே இப்படி கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்கியதால் காவல்துறையினர் பரபரப்பு அடைந்தனர். இருசக்கர வாகனம் காருக்கு அடியில் சிக்கி சேதமடைந்தது.

பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் காயமடைந்தவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கச் செய்ததனர்.

அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தினர் காரை ஓட்டியதாகக் கூறப்படும் சுலைமான் என்பவரிடம் விசாரணை நடத்தினர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com