தமிழ் நாடு
தோல்வியைத் தழுவிய தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் மீண்டும் வாக்குகளை எண்ணவேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதைக் கூறிய அவர், தன் மகன் தோல்வி அடையவில்லை; தோற்கடிக்கப்பட்டார் என்றும் சொன்னார்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆட்சியருக்கு அழுத்தம் தரப்பட்டது என்றும் அதனால் அவர் தொலைபேசியை அணைத்துவைத்ததாகவும் பிரேமலதா கூறினார்.