வீணர்களை வீழ்த்துவோம்- முதலமைச்சர் சமூக ஊடகச் செய்தி!

வீணர்களை வீழ்த்துவோம்- முதலமைச்சர் சமூக ஊடகச் செய்தி!

பெரியாரின் ஐம்பதாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள அவரின் சிலைப் பீடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவை சகாக்களுடன் மலர் மரியாதை செலுத்தினார். 

இந்த நாளை முன்னிட்டு சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்!

“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com