தூத்துக்குடி வெள்ளம்
தூத்துக்குடி வெள்ளம்(கோப்புப் படம்)

வெள்ளம் பாதித்த பகுதிகளில்... மின்சார வாரியம் எச்சரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு தொடர்பாக மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தென்கோடி மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மின்சார பாதிப்பு ஏற்பட்டது. அதை, தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மான கழகம் சரிசெய்வதில் ஈடுபட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால் பொதுமக்கள் பாதுகாப்பு ஆறு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது

1. வீட்டில் மின் சுவிட்சுகளை  ‘ஆன்’  செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும்.

 2. நீரில் நனைந்த பேன்,  லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.

 3. வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

 4. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது.

 5. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துவரக்கூடாது.

6. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com