மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி
மு.க.ஸ்டாலின் - நரேந்திர மோடி

வெள்ள பாதிப்பை நிர்மலா மதிப்பிடுவார்- மோடி கூறியதாக ஸ்டாலின் தகவல்!

தென் கோடி மாவட்டங்களின் வெள்ள பாதிப்பை மைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதிப்பிடுவார் என பிரதமர் மோடி கூறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தன் சமூக ஊடகப் பக்கங்களில் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.  

”மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட உடனே, தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் குறித்துக் கேட்டறிய பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்திருந்தார்.

கடும் நிதி நெருக்கடிக்கிடையே மாநில அரசு மேற்கொண்டு வரும் பெரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவரிடம் விளக்கிக் கூறி, ஒன்றிய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவியைக் கோரினேன்.

இந்த இரட்டைப் பேரிடரில் இருந்து தமிழ்நாடு மீண்டெழ ஒன்றிய அரசு உதவும் என உறுதியளித்த மாண்புமிகு பிரதமர் அவர்கள், வெள்ளப் பாதிப்பை மதிப்பிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com