பேருந்து வேலைநிறுத்தம்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு ஒத்திவைப்பு!

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து
Published on

அரசுப் பேருந்து ஊழியர் வேலைநிறுத்தம் சட்டவிரோதமென அறிவித்துதடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குதொடுக்கப்பட்டுள்ளது. 

இராம்குமார் ஆதித்தன் என்பவர் இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறார். 

நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், இதே போன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படுகிறது என்றும் அதனால் இந்த வழக்கை நாளைக்கு தள்ளிவைக்கக் கோரிக்கை விடப்பட்டது. 

அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com