சென்னை வேளச்சேரி தீ விபத்து
சென்னை வேளச்சேரி தீ விபத்து

சென்னையில் 9 மாடி கட்டிடத்தில் தீ விபத்து!

சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னை வேளச்சேரி ‘தி சென்னை சில்க்ஸ்’ அருகே புதிதாக 9 மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதில், இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டடத்திலிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாக நிலையில், மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கிறனர். இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com