பெலிக்ஸ் ஜெரால்டு
பெலிக்ஸ் ஜெரால்டு

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!

பெண் போலீஸ் பணியாளர்களை இழிவுபடுத்தி யூட்டியூபில் பேசவைத்ததற்காக, ரெட்பிக்ஸ் யூட்டியுபூ தளத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது சவுக்கு சங்கரோடு சேர்ந்து வழக்கு பதியப்பட்டது. அத்துடன் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

இந்த நிலையில், திருச்சி போலீசார் மீதான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 

அதில், திருச்சி கணினிசார் குற்றப்பிரிவு காவல்துறையினர் பெலிக்சை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். 

அதை விசாரித்த திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா, பெலிக்சை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். நாளை பிற்பகலில் பெலிக்சை நீதிமன்றத்தில் நிறுத்தவும் அவர் உத்தரவிட்டார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com