தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல்செய்யப்பட்ட 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கடந்த 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. மொத்தம் 1,403 பேர் வேட்பு மனு தாக்கல்செய்தனர். இதில், ஒரே வேட்பாளரின் பல மனுக்களும் அடங்கும் என்பதால், மொத்த மனுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
கரூர் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 62 பேரும், நாகையில் குறைந்தபட்சமாக 13 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று பரிசீல்னைக்குப் பின்னர், அதிகம்பட்சமாக கரூரில் 56 மனுக்களும், குறைந்தபட்சமாக நாகையில் 9 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாக்கல்செய்யப்பட்ட 22 வேட்பு மனுக்களில் 14 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
மனுக்களைத் திரும்பப்பெற சனிக்கிழமை கடைசி நாள் என்பதால், அன்று மாலை எல்லோருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியாகும்.