
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மார்ச் 11 (புதன்) - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
மார்ச் 16 (திங்கள்) - ஆங்கிலம்
மார்ச் 25 (புதன்) - தேதி கணிதம்
மார்ச் 30 (திங்கள்) - அறிவியல்
ஏப்ரல் 02 (வியாழன்) - சமூக அறிவியல்
ஏப்ரல் 06 (திங்கள்) - விருப்ப மொழித்தாள்
+2 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மார்ச் 2 (திங்கள்) - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
மார்ச் 5 (வியாழன்) - ஆங்கிலம்
மார்ச் 9 (திங்கள்) - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மார்ச் 13 (வெள்ளி ) - இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன்கள்
மார்ச் 17 (செவ்வாய்) - கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பையாலஜி, நியூட்ரிஷன் மற்றும் டயட்டிக்ஸ், டெக்ஸ்டெய்ல்ஸ் மற்றும் டிரஸ் டிசைனிங், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட், விவசாய வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
மார்ச் 23 (திங்கள்) - உயிரியல், தாவரவியல், வணிகவியல் கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னணுவியல், அடிப்படை கட்டிடவியல், அடிப்படை இயந்திரவியல், டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை
மார்ச் 26 (வியாழன்) - கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், அரசியல் அறியல், Communicative English, Advanced Language (Tamil) புள்ளியியல், நர்சிங், அடிப்படை மின் பொறியியல், வீட்டு அறிவியல்
கணக்குப்பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
10 தேர்வு முடிவு மே- 20ஆம் தேதியும் +2 தேர்வு முடிவு மே 08 ஆம் தேதியும் வெளியாகின்றன.