தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்துவருகிறது. முற்பகல் 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலால் காலை 6.30 மணியிலிருந்து வாக்காளர்கள் சாவடிகளை நோக்கி குவிந்தனர்.
வெயில் அதிகரிக்க அதிகரிக்க கூட்டம் கொஞ்சம் குறையத் தொடங்கியது.
தமிழக அளவில் வாக்குப்பதிவு தொடங்கி 4 மணி நேரம் ஆகியும் கால் பங்கு வாக்குகள்கூடப் பதிவாகவில்லை.
11 மணி நிலவரத்தை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான எந்தப் பிரச்னையும் பதிவாகவில்லை என்றார்.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 11 மணி நிலவரப்படி 11.09 சதவீத வாக்குகள் பதிவாகின என்றும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 27.63 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.