காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்!

Tamilnadu fishers arrested
தமிழக மீனவர்கள் கைது
Published on

காரைக்காலிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நேற்று (ஜனவரி 1) இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. மேலும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

அந்த வகையில் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களை நேற்று நள்ளிரவில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.

மேலும் மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

கடந்த மாதம் 28 மற்றும் 30ஆம் தேதிகளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னதாக தமிழக மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com