சென்னை: மழைநீர் வடியாத 11 சுரங்கப்பாதைகள் மூடல்!

சென்னை: மழைநீர் வடியாத 11 சுரங்கப்பாதைகள் மூடல்!

சென்னையில் மழை நீர் வடியாத 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.

‘மிக்ஜம்’ புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்கல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடந்த இரு நாள்களாக சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது போக்குவரத்து சீராகியுள்ளது. இருப்பினும், சென்னையின் பல்வேறு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

சென்னை தாம்பரத்திலிருந்து அண்ணா சாலை வரையும், ஜி.எஸ்.டி. சாலையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து தடையின்றி இயங்கி வருகின்றது.

புழல் ஏரியில் நீர் திறக்கப்பட்டு வருவதால் மஞ்சம்பாக்கம் - வடபெரும்பாம்பாக்கம் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குரோம்பேட்டையிலிருந்து துரைப்பாக்கம் செல்லும் ரேடியல் ரோடிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கணேசபுரம், செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை - அரங்கநாதன், சி.பி. சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், மாணிக்கம் நகர், சூளைமேடு லயோலா, கதிர்வேடு ஆகிய சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com