தமிழ் நாடு
14ஆம் தேதி முதல் தேசிய புத்தக வார விழா- சென்னையில் தொடக்கம்!
சாகித்திய அகாதமியின் சார்பில் வரும் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா சாலைச் சந்திப்பு அருகே உள்ள குணா கட்டடத்தில் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது.
வரும் 14ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு, 443 அண்ணா சாலை எனும் முகவரியில் உள்ள குணா கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது.
காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை புத்தகக்காட்சி நடைபெறும்.
குறைந்தது 20 சதவீதம் முதல் 50 சதவீதம்வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் குழுவில் இணைந்துகொள்வோருக்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 25 சதவீதம் சலுகைவிலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.