14.31 லட்சம் பேர் ரேசன் கார்டுக்கு கைரேகைப் பதிவு செய்யவில்லை!

compulsory thumb impression in Rationcard essential
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு கட்டாயம்
Published on: 

தமிழகத்தில் 14.31 இலட்சம் ரேசன்கார்டுதாரர்கள் கைரேகைப் பதிவைச் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள முன்னுரிமை ரேசன் அட்டைகள், அந்தியோதயா அன்னயோஜனா ரேசன் அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை உறுதிப்படுத்த, கைவிரல் ரேகை, கண் கருவிழிப் பதிவை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 18 இலட்சம் ரேஷன் அட்டைகளில் உள்ள 3,57,78,227 அதாவது 3 கோடிக்கும் மேல் இருக்கும் உறுப்பினர்களின் கைவிரல் ரேகை, கண் கருவிழிப் பதிவை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 99.39 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களின் கைவிரல் ரேகைப் பதிவை மேற்கொள்ள மத்திய அரசு வலியுறுத்திவரும்நிலையில், இதுவரை 95.96% பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

இன்னும் பதிவு செய்ய வேண்டிய 14.31 லட்சம் பேரில், பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com