இலங்கைத் தமிழர் முகாம் புதிய வீடுகள்
இலங்கைத் தமிழர் முகாம் புதிய வீடுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு 1,591 புதிய வீடுகள் திறப்பு - எந்தெந்த முகாமில் எத்தனை வீடுகள்?

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகள் இன்று திறந்துவைக்கப்பட்டன.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில், வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் முகாமில் நேரடியாகவும் மற்ற 12 முகாம்களில் கட்டப்பட்ட வீடுகளை காணொலி மூலமாகவும் திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 29 மாவட்டங்களில் 104 இலங்கைத் தமிழர் தற்காலிக முகாம்களில்19,498 குடும்பங்களைச் சார்ந்த 58,272 பேர் வசித்துவருகின்றனர்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்தபடி, இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்றும் முதற்கட்டமாக, 3510 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.176.02 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 13 மாவட்டங்களில் உள்ள 19 முகாம்களில் 1,591 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டம், மேல்மொணவூர் முகாமில் அடையாளமாக 5 குடும்பத்தினருக்கு சாவிகளையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்களையும், மரக்கன்றுகளையும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

இலங்கைத் தமிழர் முகாம் புதிய வீடுகள்
இலங்கைத் தமிழர் முகாம் புதிய வீடுகள்

இந்த முகாமில் 11 கோடி ரூபாய் செலவில் 220 வீடுகளும்,

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் முகாமில் 21 கோடி ரூபாய் செலவில் 420 வீடுகளும்,

சேலம் மாவட்டத்தில் 13.22 கோடி ரூபாய் செலவில், பவளத்தானூர் முகாம், அத்திக்காட்டானூர் முகாம் மற்றும் குறுக்குப்பட்டி ஆகிய முகாம்களை ஒருங்கிணைக்கப்பட்டு 244 வீடுகளும், தம்மப்பட்டி முகாமில் 20 வீடுகளும்,

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7.02 கோடி ரூபாய் செலவில், செவலூர் முகாமில் 3.11 கோடி ரூபாய் செலவில் 62 வீடுகளும், அனுப்பன்குளம் முகாமில் 40 இலட்சம் ரூபாய் செலவில் 8 வீடுகளும்,

குல்லூர்சந்தை முகாமில் 3.51 கோடி ரூபாய் செலவில் 70 வீடுகளும்,

கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டூர் முகாமில் 5.60 கோடி ரூபாய் செலவில் 112 வீடுகளும்,

திருவண்ணாமலை மாவட்டம், புதிப்பாளையம் மற்றும் பையூர் முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 5.57 கோடி ரூபாய் செலவில் 111 வீடுகளும்,

சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் முகாமில் 4.51 கோடி ரூபாய் செலவில் 90 வீடுகளும்,

தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி முகாமில் 2.60 கோடி ரூபாய் செலவில் 52 வீடுகளும்,

தருமபுரி மாவட்டம், சின்னாறு அணை முகாமில் 2.51 கோடி ரூபாய் செலவில் 50 வீடுகளும்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை முகாமில் 1.86 கோடி ரூபாயில் 37 வீடுகளும்,

திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் முகாமில் 1.77 கோடி ரூபாய் செலவில் 35 வீடுகளும்,

மதுரை மாவட்டம், திருவாதவூர் முகாமில் 1.51 கோடி ரூபாய் செலவில் 30 வீடுகளும்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம், வாழவந்தான்கோட்டை முகாமில் 1.51 கோடி ரூபாய் செலவில் 30 வீடுகளும் இன்று திறந்து வைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com