16 இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைப் படையால் கைது!

Tamilnadu fishermen arrested
தமிழக மீனவர்கள் கைது
Published on: 

இந்தியக் கடல் எல்லையைத்தாண்டி இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடித்ததாக இராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வட இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. 

இரண்டு படகுகளில் மீன்பிடியில் இருந்த இவர்களைக் கைதுசெய்துள்ள இலங்கைக் கடற்படை, காங்கேசன்துறை கடல் தொழில் மீன்வளத் துறையினரிடம் கையளிக்கும்.

பின்னர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com