ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

17 Tamilnadu fishers arrested
தமிழக மீனவர்கள் 17கைது
Published on

ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் மீனவர்கள் சென்ற 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com