சத்தியப்பிரதா சாகு
சத்தியப்பிரதா சாகு

நவ.18,19-இல் வாக்காளர் முகாம் இல்லை- தீபாவளி விடுமுறையால் 25,26 தேதிகளுக்கு மாற்றம்!

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முகாம் தேதிகள் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு மாற்றி வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தமிழ்நாட்டுத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“ வரும் ஜனவரி முதல் தேதியைத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது. வரும் ஜனவரி 5ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், நவம்பர் 4, 5, ,18,19 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஏற்கெனவே இந்த மாதம் இரண்டு முகாம்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தமிழக அரசால், 18.11.2023 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம் தேதிகளை வரும் 18, 19 தேதிகளுக்குப் பதிலாக, 25.11.2023 (சனிக்கிழமை), 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களுக்கு மாற்றியமைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com