மீண்டும் தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

மீண்டும் தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!
(கோப்புப் படம்)
Published on

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அது கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.

இந்நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தனர். மேலும், மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மீனவர்கள் 19 பேரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com