19இல் தஞ்சையில் டெல்டா தி.மு.க. மகளிர் மாநாடு!

anna arivalayam glittering with Iluminating lights
அண்ணா அறிவாலயம்
Published on

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” வரும் 19ஆம் தேதி டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 

அதன் அறிவிப்பு விவரம்:

“ கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றது. 

அதைப் போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட – முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - கழக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் பங்கேற்பில்;

வருகிற 19.01.2026 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ்பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன், பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன், எம்.எல்.ஏ., க.வைரமணி, க.அன்பழகன், எம்.எல்.ஏ., வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், எம்.எல்ஏ., கே.கே.செல்லபாண்டியன், என்.கௌதமன், டி.பழனிவேல் அமைச்சர்கள் கோவி.செழியன், சிவ வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண்நேரு, முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள்.

நிறைவாக, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.” என்று தி.மு.க. தலைமைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com