ஒரே நாளில் 2 த.வெ.க. நிர்வாகிகள் மீது பாலியல் புகார்!

ஒரே நாளில் 2 த.வெ.க. நிர்வாகிகள் மீது பாலியல் புகார்!
Published on: 

இன்று ஒரே நாளில் கோவை, திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள் மீது பாலியல் குறச்சாட்டு எழுந்து பிரச்னையாகியுள்ளது.  

த.வெ.க.வின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் சத்யா. இவர் கட்சியின் பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும் தவறாக நடந்து கொள்வதாகவும் சக பெண் நிர்வாகிகளே குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட பெண் நிர்வாகிகளிடமிருந்து பணத்தையும் சொத்துக்களை எழுதியும் வாங்கி மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகிகள், வெறும் புகாருடன் நின்றுவிடாமல், ஆரணியில் உள்ள மாவட்டச் செயலாளர் சத்யாவின் அலுவலகத்தைப் பூட்டி இன்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனிடையே, கோவை காரமடை ஒன்றிய த.வெ.க. செயலாளர் கருப்புசாமி மீது இதேபோல பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். சக கட்சிக்காரரான பெண்ணையே கீழ்த்தரமாக நடத்தியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, கருப்புசாமியிடம் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தினர் விசாரணை நடத்தினர் என்று கூறப்படுகிறது.