5,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் 2 புதிய ஒப்பந்தங்கள்!

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் 2 புதிய ஒப்பந்தங்கள்!
Published on

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாடு நடைபெற்றது. 

இதில், ரூ.36,968 கோடி முதலீட்டில் 60,823 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 71 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

 
ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 52 முடிவுற்ற திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

மேலும், அவரின் முன்னிலையில் ரூ.5,000 கோடி முதலீடு, 5000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

logo
Andhimazhai
www.andhimazhai.com