குசேலன் படத்தில் நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்தவர், சோனா. அத்துடன் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர், சென்னை, மதுரவாயல் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் வியாழன் அன்று இரவு, யாரோ சிலர் வீட்டு வளாகத்திற்குள் குதித்து ஏசி இயந்திரத்தைத் திருடிச்செல்ல முயன்றனர். அதைப் பார்த்து வீட்டில் உள்ள நாய்கள் குரைக்கத் தொடங்கியது.
சோனாவும் திருடன் திருடன் எனக் கத்தியதும் வந்தவர்கள் திருட்டு முயற்சியைக் கைவிட்டு, வெளியில் நிறுத்திவைத்திருந்த பைக்கில் ஏறித் தப்பினர்.
சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் சோனா புகார் அளித்தார்.
கண்காணிப்பு கேமராக்களைப் பார்த்து காவல்துறையினர் நடத்திய தேடுதலில், இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் லோகேஷ்(21 வயது), சிவா(23) என்பது தெரியவந்துள்ளது.