2 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரம்!

Published on: 

ஊரே தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சமயத்தில் அசம்பாவிதங்களும் நடப்பதுண்டு. திருச்சி, சமயபுரம் அருகே இரண்டு சிறுவர்கள் வெட்டிக்கொல்லப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. 

சுங்கச்சாவடி அருகே கூலி வேலைசெய்துவந்த இரண்டு சிறுவர்களும் புள்ளம்பாடி வாய்க்கால் அருகே வெட்டிக்கொல்லப்பட்டு வீசப்பட்டுள்ளனர்.

வாய்க்கால் கரையில் காணப்பட்ட சிறுவர்கள் இருவரும் 17 வயதினர் என்றும் ஒருவர் பெயர் இராகுல், இன்னொருவர் விஷால் என்றும் தெரியவந்துள்ளது. 

தகவலறிந்த காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றிக் கூறாய்வுக்கு அனுப்பியுள்ளனர்.