தமிழ் நாடு
சென்னை, பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் வாந்தி பேதியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் மலைமேடு பகுதியில் இந்தப் பிரச்னை உருவாகியுள்ளது.
ஏற்கெனவே திருவேதி என்பவர் (66 வயது) உயிரிழந்த நிலையில், தற்போது மோகனரங்கன் என்பவர் இறந்துள்ளார்.
இருவரின் உடல்களும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்டவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் தா.மோ. அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலந்தது காரணமாக இருக்காது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.